January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையின் சில பகுதிகளில் மின் விநியோகம் தடை!

நாட்டின் சில பகுதிகளில் குறுகிய கால  மின்  விநியோகத் தடை ஏற்பட்டுள்ளதாக மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

நுரைச்சோலை மின்னுற்பத்தி நிலையத்தில் இரண்டாவது மின்பிறப்பாக்கி பழுதடைந்தமையினால் இவ்வாறு மின் வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக  அமைச்சு தெரிவித்துள்ளது.

கொதிகலனில் ஏற்பட்ட நீர் கசிவு காரணமாக இரண்டாவது ஜெனரேட்டரை அமைப்பிலிருந்து அகற்றியதாக அமைச்சின் பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்தன தெரிவித்தார்.

இதனால், நாட்டின்  சில பகுதிகளில் 30 நிமிடங்களுக்கு மின்சாரம் தடைப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.