அரசாங்கத்துக்கு மக்கள் அபிப்பிராயத்தில் மூன்றில் ஒரு பங்கேனும் ஆதரவு இல்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
இன்று அவிசாவளையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே, அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் வரவு செலவுத் திட்டத்தை நிறைவேற்றியுள்ள போதிலும், பாராளுமன்றத்திற்கு வெளியே அவ்வாறான ஆதரவு இல்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்திற்கு வெளியேயும் மூன்றில் இரண்டு இருக்கின்றது என்பதை நிரூபித்துக் காட்டுமாறு எதிர்க்கட்சி சவால் விடுத்துள்ளது.
நாட்டு வளங்களைப் பாதுகாக்க வந்த அரசாங்கம் அமைச்சரவைக்கும் தெரிவிக்காமல் அனைத்து வளங்களையும் விற்பனை செய்வதாக சஜித் குற்றம்சாட்டியுள்ளார்.
அரசாங்கம் விவசாய சமூகத்தை சட்டியில் இருந்து அடுப்புக்குள் தள்ளிவிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.