
பொரளையில் உள்ள நகைக்கடை ஒன்றில் துப்பாக்கிதாரிகள் கொள்ளையடித்த சம்பவம் இன்று (11) இடம்பெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிளில் வந்த இரு சந்தேக நபர்கள் வானத்தை நோக்கி துப்பாக்கி பிரயோகம் செய்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
பின்னர் பொரளை பகுதியில் உள்ள ஒரு நகைக்கடையில் கொள்ளை அடித்துச் சென்றுள்ளனர்.
முகத்தை முழுமையாக மறைக்கும் வகையிலான தலைக்கவசம் அணிந்த இரண்டு துப்பாக்கிதாரிகள் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.