எதிர்வரும் தமிழ், சிங்கள புத்தாண்டுக்குள் நாட்டில் மரக்கறி தட்டுப்பாடு மேலும் அதிகரிக்கும் என மரக்கறி வியாபாரிகள் எச்சரிக்கின்றனர்.
நாட்டில் தற்போது நிலவும் மரக்கறி வகைகளுக்கான தட்டுப்பாடு நீடிக்குமானால் தமிழ், சிங்கள புத்தாண்டு காலத்தில் மேலும் நெருக்கடியை சந்திக்க நேரிடும் என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
தற்போது மரக்கறிகளின் மொத்த விலை 300 ரூபாவிலிருந்து அதிகரித்து இருப்பதாக வியாபாரிகள் விசனம் தெரிவிக்கின்றனர்.
இதன் காரணமாக தமக்கு வியாபாரத்தை எடுத்துச் செல்ல முடியாது உள்ளதாகவும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.
உர பற்றாக்குறை காரணமாக விவசாயிகள் மரக்கறி உற்பத்தியை நிறுத்தி உள்ளதால் எதிர்காலத்தில் சந்தையில் மரக்கறிகளை விற்பனை செய்வது மிகவும் கடினம் என அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்
இதேவேளை, சந்தையில் மீண்டும் பால் மாவுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக நுகர்வோர் விசனம் தெரிவிக்கின்றனர்