இலங்கை தபால் திணைக்களத்தின் அனைத்து தொழிற்சங்கங்களும் இணைந்து திங்கட்கிழமை முதல் 32 மணித்தியால அடையாள வேலை நிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளன.
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இவர்கள் 32 மணி நேர வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இதன்படி திங்கள் (13) மாலை 4 மணி முதல் 14 ஆம் திகதி இரவு நள்ளிரவு வரை வேலை நிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அஞ்சல் மற்றும் தொலைத்தொடர்பு உத்தியோகத்தர்கள் சங்கத்தின் தலைவர் சாந்தகுமார மீகம தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கல்வி கூட்டுறவு பொது ஊழியர் சங்கம் தமக்கான 10,000 ரூபா கொடுப்பனவை வழங்குமாறு கோரி ஆரம்பிக்கப்பட்டுள்ள பணிப்புறக்கணிப்பு போராட்டம் எதிர்காலத்தில் மேலும் தீவிரப்படுத்தப்படும் என கல்வி கூட்டுறவு பொது ஊழியர் சங்கத்தின் தலைவர் நந்தன ஹேவகே தெரிவித்துள்ளார்.