
பதுளை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் ஐவர் காயமடைந்துள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
காயமடைந்த சந்தேகநபர்கள் ஐவரும் பதுளை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பல்வேறு குற்றச்செயல்களில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்களே இவ்வாறு மோதிக்கொண்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பாக விசாரணை ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.