பிரியந்த குமார கொலை செய்யப்படும்போது, தனது உயிரையும் துச்சமென நினைத்து பிரியந்தவுக்காகப் போராடிய பாக்கிஸ்தான் பிரஜை மாலிக் அட்னான்னை, இலங்கைப் பாராளுமன்றத்துக்கு அழைத்து வரவேண்டும் என ஆளுங்கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்தது.
பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை, நிதி அமைச்சின் விவாதத்தில் உரையாற்றிய வேளையில் ஆளும்கட்சி பாராளுமன்ற உறுப்பினரான ஜயந்த கெட்டகொட மேற்கண்டவாறு கோரிக்கையை முன்வைத்தார்.
பாக்கிஸ்தானில் வைத்து இலங்கையரான பிரியந்த குமார படுகொலை செய்யப்பட்டிருந்தார். பிரியந்த குமாரவை கொலைக்காரர்களிடமிருந்து பாதுகாக்க தனது உயிரையும் துச்சமென மதித்து போராடிய அந்நாட்டு பிரஜையான மாலிக் அட்னான்னுக்கு, அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் உள்ளிட்ட பாக்கிஸ்தான் அரசாங்கம் கௌரவித்துள்ளது.
எனவே மாலிக் அட்னான்னை இலங்கைப் பாராளுமன்றத்துக்கு அழைத்து அரசாங்கம் அவரை கௌரவிக்க வேண்டும் எனவும் சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்தார்.இலங்கைப் பாராளுமன்றத்துக்கு அழைத்து கௌரவிக்க வேண்டும் எனவும் இதன்போது சபையில் கோரிக்கை விடுத்தார்.