October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘வரவு-செலவுத்திட்டம் விவாதிக்கப்படும்போதே கடன் கேட்டு இந்தியாவுக்கு செல்ல வேண்டிய நிலை’

வரவு – செலவுத்திட்டத்தில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்காக கடனுக்காக அமைச்சர் பசில் ராஜபக்ஸ அல்லல்பட்டு திரிகின்றார்.இந்த வரவு செலவுத்திட்டம் பாராளுமன்றத்தில் விவாதிக்கப்படும்போதே அவர் கடன் கேட்டு இந்தியாவுக்கு செல்ல வேண்டிய நிலையில் இருக்கின்றார் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் சபையில் தெரிவித்தார்.

பலமான செல்வாக்குமிக்க அரசின் செல்வாக்குள்ள, நிதி விடயத்தில் மட்டுமல்லாது ஏனைய விடயங்களிலும் கூட பலமாகவுள்ள அமைச்சர்தான் பஷில் ராஜபக்ஸ.அவரது காலத்தில் வட,கிழக்கிலே இருக்கக்கூடிய இடங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படும்போது அந்த இடங்களுக்கு நேரடியாக சென்று அந்தப் பகுதிகளை பார்வையிட்டு அங்கு தேவையான அபிவிருத்திகள் பற்றி அங்கிருக்கக்கூடிய அரசியல், சமூக, அரச அதிகாரிகளுடன் கலந்துரையாடி செயல்பட்டு வந்துள்ளார்.ஆனால் இன்று அவரின் செயல்பாடுகள் இன்றுள்ள நிதி நெருக்கடியினாலோ என்ன காரணத்தினாலோ கொஞ்சம் குறைவாகவே பலரும் பார்க்கின்றனர் எனவும் அவர் கூறினார்.

யுத்தம் முடிந்தவுடன் புலம்பெயர் தமிழர்கள் பலர் இங்கு நிதிகளைக் கொண்டு வந்து முக்கியமாக வடக்கு,கிழக்கு பகுதிகளில் தொழில் முயற்சிகளை ஆரம்பிக்க விரும்பினர்.அனால் அதற்கு பெரும் தடைகள் ஏற்படுத்தப்பட்டன.இன்று கூட மீன்பிடித்துறையில் முதலீடு செய்ய பலர் தயாராக இருக்கின்றபோது கூட ,அமைச்சர் அதனை உடனடியாக செய்ய கையெழுத்து போட்டுக்கொடுத்தால் கூட தடைகள் ஏற்படுத்தப்பட்டு அந்த முதலீடு செய்ய வந்தவர்கள் திரும்பி சென்ற நிலைமைகளையும் நாம் பார்த்துள்ளோம் என்றார்