January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

புதிய எரிவாயு சிலிண்டர் வெடிப்பு சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்!

ஹங்குரன்கெத்த பிரதேசத்தில் புதிய முத்திரையுடன் கூடிய எரிவாயு சிலிண்டர் வெடித்துள்ளதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் தற்போது விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார்.

இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் விசாரணை நடத்தாமல் ஒரு முடிவுக்கு வர முடியாது என தெரிவித்த இராஜாங்க அமைச்சர், இதற்கு முன்னர் பொலன்னறுவையில் இது போன்ற ஒரு சம்பவம் பதிவாகியதாக குறிப்பிட்டார்.

எனினும் பின்னர் குறித்த சம்பவத்திற்கான காரணம் கண்டறியப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார்.

இலங்கையில் அண்மைக்காலமாக எரிவாயு சிலிண்டர்களுடன் தொடர்புடைய வெடிப்பு சம்பவங்கள் பல பதிவாகியதையடுத்து எரிவாயு விற்பனை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது.

எனினும் ஆய்வுகளின் பின்னர் புதிய முத்திரையுடன் கூடிய எரிவாயு சிலிண்டர்கள் சந்தைக்கு விநியோகிக்கப்பட்டன.