ஐக்கிய நாடுகள் சபைக்கான உதவி இராஜாங்க செயலாளர் கன்னி விக்னராஜா ஐந்து நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு எதிர்வரும் திங்கட்கிழமை (13) இலங்கை வரவுள்ளார்.
கன்னி விக்னராஜா, ஐக்கிய நாடுகளின் வளர்ச்சித் திட்டத்தின் உதவி நிர்வாகியாகவும் அதன் ஆசிய-பசிபிக் பிராந்திய பணிப்பாளராகவும் உள்ளார்.
பிரிட்டனின் ஸ்கொட்லாந்து- க்லாஸ்கோவில் நடைபெறவுள்ள ‘சிஒபி: 26 ஐநா காலநிலை மாற்றம்” தொடர்பான உச்சி மாநாட்டின் முடிவுகளை ஆராயும் நோக்கில் உதவி இராஜாங்க செயலாளர் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.
அத்தோடு, இலங்கை நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளை அடைவதை விரைவுபடுத்துவதில் கவனம் செலுத்துவதுடன், குறிப்பாக மனித அபிவிருத்தித் துறையில் இலங்கையின் சாதனைகள் தொடர்பிலும் ஆராய உள்ளார்.