ஒமிக்ரோன் கொவிட் தொற்று பரவல் அச்சம் காரணமாக இலங்கைக்குள் பிரவேசிக்க சிலஆபிரிக்க நாடுகளுக்கு விதிக்கப்பட்டிருந்த பயணத் தடை தளர்த்தப்பட்டுள்ளதாக சிவில் விமான சேவைகள் அதிகார சபை தெரிவித்துள்ளது.
அதன்படி, தென்னாபிரிக்கா, நமீபியா, சிம்பாப்வே, போட்ஸ்வானா, லெசோதோ மற்றும் ஈஸ்வதினி ஆகிய நாடுகளுக்கு சென்ற இலங்கையர்கள் மீண்டும் நாட்டுக்குள் வருவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸின் புதிய திரிபான ஒமிக்ரோன் பரவும் ஆபிரிக்க நாடுகளான தென்னாபிரிக்கா, போஸ்ட்வானா, லெசதோ, சிம்பாப்வே, சுவாசிலாந்து மற்றும் நமீபியா ஆகிய நாடுகளில் இருந்து இலங்கைக்குள் வருவதற்கு நவம்பர் 27 ஆம் திகதி முதல் தடை விதிக்கப்பட்டது.
இதன் காரணமாக வெளிநாட்டவர்களை போன்றே குறித்த ஆபிரிக்க நாடுகளில் உள்ள இலங்கையர்களும் நாட்டுக்கு வர அனுமதி மறுக்கப்பட்டது.