February 22, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பொது இடங்களில் தடுப்பூசி அட்டையை கட்டாயமாக்க முடிவு!

vaccination New Image

இலங்கையில் கொவிட் தடுப்பூசிகளை போட்டுக்கொள்ளாதவர்களை பொது இடங்களுக்கு செல்வதை தடை செய்வதற்கு கொவிட் தடுப்பு விசேட செயலணியில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இன்று முற்பகல் ஜனாதிபதி தலைமையில் அந்த செயலணி கூடிய போதே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளாத எவரையும் பொது இடங்களில் அனுமதிக்காது இருப்பதற்கும் அதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்படி இனிவரும் காலங்களில் தடுப்பூசி போட்டுள்ளமையை உறுதிப்படுத்துவதற்காக தடுப்பூசி அட்டையை பரிசோதிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.