May 15, 2025 9:19:58

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொழும்பிலிருந்து யாழ். பயணித்த பஸ் விபத்து: ஒருவர் மரணம்!

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த அதிசொகுசு பஸ் ஒன்று அனுராதபுரம் பகுதியில் விபத்துக்கு உள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இன்று அதிகாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வெள்ளவத்தையில் இருந்து நேற்று இரவு யாழ்ப்பாணம் நோக்கி புறப்பட்ட குறித்த பஸ் இன்று அதிகாலை அனுராதபுரம் மதவாச்சி பகுதியில் வீதியை விட்டு விலகி, வயலொன்றில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது அந்த பஸ்ஸில் பயணித்த 74 வயதுடைய வயோதிப பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதுடன், 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை அனுராதபுரம் பகுதியில் இன்று காலை இடம்பெற்ற மற்றுமொரு வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.