January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

வரவு செலவுத் திட்டம் 2022: இறுதி வாக்கெடுப்பு இன்று!

இலங்கையின் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுக்கப்பு இன்று நடைபெறவுள்ளது.

நிதி அமைச்சரான பஷில்  ராஜபக்‌ஷவினால் நவம்பர் 12 ஆம் திகதி வரவு செலவுத்  திட்டம் சபையில் சமர்பிக்கப்பட்டதுடன், அதன் இரண்டாம் வாசிப்பு மீதான குழுநிலை விவாதம் 13 ஆம் திகதி முதல் நடைபெற்றுதுடன்,

இதன்படி இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு 22 ஆம் திகதி இடம்பெற்றதுடன், அதன்போது 153 வாக்குகளால் அது நிறைவேறியது.

இந்நிலையில் 23 ஆம் திகதி முதல் அமைச்சுக்களுக்கான நிதி ஒதுக்கீடு மீதான குழுநிலை விவாதம் நிடைபெற்று, இன்று மாலை இறுதி வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.

இதன்போது அரசாங்க தரப்பினரும், எதிர்க்கட்சியை சேர்ந்த சிலரும் வரவு செலவுத் திட்டத்தை ஆதரித்து வாக்களிக்கலாம் என்று தெரிவிக்கப்படுகின்றது.