October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘இளைஞர்கள் வெளிநாடு செல்வதால் பொருளாதாரத்தை பலப்படுத்த முடியுமெனில் பிரச்சினையில்லை’

நாட்டின் அந்நிய செலாவணிக்கு உதவியளிக்கும் விதமாகவும், பொருளாதாரத்தை பலப்படுத்துவதற்காகவும் இளைஞர்கள் வெளிநாடுகளுக்கு செல்வதால் பிரச்சினை இல்லையென விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் நாமல் ராஜபக்‌ஸ சபையில் தெரிவித்துள்ளார்.

நாட்டில் இன்று 30 வீதமான இளைஞர்கள் வேலையில்லாது இருக்கின்றனர். கொவிட் நிலைமையால் இதில் மாற்றங்கள் ஏற்படலாம். நாங்கள் அரசாங்கமாக இருந்து இவற்றுக்கு தீர்வு காண்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இதனால் இளைஞர்கள் மத்தியில் தொழில் பயிற்சிகளை அதிகரிக்க தேவையான நடவடிக்கை எடுக்கின்றோம் எனக் கூறிய அவர்,

தொழிற்பேட்டைகளுக்கு சென்று பார்த்தால் அங்கு இடங்கள் உள்ளன. இப்போது இளைஞர்கள் வெளிநாடுகளுக்கு செல்வது தொடர்பாக கதைக்கின்றோம். அவர்கள் வேலைகளை தேடி எங்கே சென்றாலும் பிரச்சனையில்லை. அவர்கள் எமது அந்நிய செலாவணிக்கு உதவி பொருளாதாரத்தை பலப்படுத்த உதவினால் எந்தப் பிரச்சனையும் இல்லை.எவ்வாறாயினும் நாங்கள் நீண்ட கால வேலைத்திட்டங்களுடன் இளைஞர்கள் தொடர்பில் திட்டங்களை அமைக்க வேண்டும்.தொழில்நுட்பத்துடன் நாங்கள் இளைஞர்களை கொண்டு செல்ல வேண்டும் என்றார்.