File Photo
டொலர் தட்டுப்பாடு காரணமாக அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய 1000 கொள்கலன்கள் துறைமுகத்தில் தேங்கிக் கிடப்பதாக இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
பெரும்பாலான கொள்கலன்களில் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஸ்பிரேட்ஸ், உலர் கொத்தமல்லி மற்றும் பிற மசாலாப் பொருட்கள் உள்ளதாகவும், சில கொள்கலன்கள் உள்ள பொருட்கள் காலாவதியாகும் அபாயத்தில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டொலர் தட்டுப்பாடு மற்றும் ஏற்கனவே தேங்கியுள்ள கொள்கலன்களின் எண்ணிக்கைக்கு மேலதிகமாக புதிய கொள்கலன்களை சேர்த்தமையே இந்த நிலைமைக்கு காரணம் என முன்னணி இறக்குமதியாளர் ஒருவர் தெரிவித்தார்.
வணிக வங்கிகள் இதற்கு முன்னரை போன்று டொலர்களை வழங்கியிருந்தால், நாளாந்தம் கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டிருக்கும் எனவும் முன்னணி இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர்.