இலங்கையர்களுக்கான வேலைவாய்ப்புகள் குறித்து பிரதமர் மகிந்த ராஜபக்ஷவிடம் ஜப்பான் தூதுவர் விளக்கமளித்துள்ளார்.
இலங்கையில் பயிற்சிபெற்ற பணியாளர்களை ஜப்பானில் பணியில் ஈடுபடுத்துவதற்கு ஆர்வமாக உள்ளதாக புதிய ஜப்பான் தூதுவர் மிசிகொஷி ஹெதெகி தெரிவித்துள்ளார்.
இலங்கைப் பணியாளர்களை பணியில் ஈடுபடுத்துவதற்கு ஜப்பான் அரசாங்கமும் ஆர்வமாக இருப்பதாக மிசிகொஷி ஹெதெகி தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கான புதிய ஜப்பான் தூதுவராக அண்மையில் கடமைகளைப் பொறுப்பேற்ற மிசிகொஷி ஹெதெகி இன்று பிரதமரைச் சந்தித்துள்ளார்.
கடந்த சில ஆண்டுகளில் குறைந்த திறன் மற்றும்; நிபுணத்துவம் கொண்ட பணியாளர்களை ஆட்சேர்ப்பு செய்வது தொடர்பாக இலங்கைக்கும் ஜப்பானுக்கும் இடையே இரு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இலங்கையிலிருந்து ஜப்பானுக்கு 14 துறைகளின் கீழ் பணியாளர்களை சேவையில் இணைத்துக்கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக வெளியுறவு அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.