January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

2022 ல் வாகன இறக்குமதி இல்லை, பொதுச் சேவைக்கு ஆட்சேர்ப்பு இல்லை – பசில்

2022 ஆம் ஆண்டில் வாகன இறக்குமதி மற்றும் பொதுச் சேவைகளுக்கு ஆட்சேர்ப்பு மேற்கொள்ளப்படாது என நிதி அமைச்சர் பசில் ராஜபக்‌ஸ தெரிவித்துள்ளார்.

இன்று நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், மேற்கூறியவற்றுக்கு அரசாங்கம் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

ஊழியர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது செயல்திறனை மேம்படுத்தாது என கூறியதோடு, புதிதாக ஊழியர்களை இணைத்துக்கொள்ள கோர வேண்டாம் என்றும் பொதுத்துறை அதிகாரிகளை அமைச்சர் பசில் ராஜபக்‌ஸ வலியுறுத்தினார்.

மேலும் பேசிய நிதியமைச்சர், கடந்த ஆண்டு வெளிநாட்டு நிதி கையிருப்பு அதிகமாக காணப்பட்ட நிலையில் இந்த ஆண்டு வெளிநாடுகளுக்கு பணிக்காக செல்பவர்களில் ஏற்பட்ட வீழ்ச்சியின் காரணமாக இந்த நிதி வெகுவாக  குறைந்துள்ளதாகவும் கூறினார்.

இலங்கையிலிருந்து ஆண்டுதோறும் 230,000 பேர் வெளிநாட்டு தொழில் வாய்ப்புகளுக்காக செல்கின்ற நிலையில் கடந்த ஆண்டு இந்த எண்ணிக்கை 53,000 ஆக வீழ்ச்சி அடைந்ததாகவும் நிதி அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

எவ்வாறாயினும் தற்போது, 100,000 க்கும் மேற்பட்டோர் வெளிநாடுகளுக்கு தொழில் வாய்ப்புகளுக்காக அனுப்பப்படுவதையடுத்து, அடுத்த ஆண்டு இந்த எண்ணிக்கையை 300,000 ஆக அதிகரிப்பதே அரசாங்கத்தின் இலக்கு என்று அமைச்சர் பசில் ராஜபக்‌ஸ கூறினார்.