இலங்கையில் முட்டை ஒன்றின் விலை 30 ரூபாய் வரை அதிகரித்துள்ளது.
முட்டை ஒன்றின் விலையை 30 ரூபாய் வரை அதிகரிக்க வேண்டிய நிலைக்கு தாம் தள்ளப்பட்டுள்ளதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் சரத் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
விலங்குகளுக்கான தீவன தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், விலங்குணவின் விலை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த வாரத்தில் கோழி இறைச்சியின் விலை 840 ரூபாய் வரை அதிகரித்து இருந்தாலும், இப்போது 650 ரூபாய் வரை குறைவடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.