February 22, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

அரசியல் பழிவாங்கல் ஆணைக்குழுவுக்கு எதிரான ரணிலின் மனுவை விசாரிக்க உத்தரவு

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அரசியல் பழிவாங்கல் தொடர்பான ஆணைக்குழுவின் அறிக்கைக்கு எதிராக தாக்கல் செய்த ரிட் மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் குறித்த மனு பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, விசாரணைக்கு திகதி குறிக்கப்பட்டுள்ளது.

தனக்கு எதிராக அரசியல் பழிவாங்கல் தொடர்பான விசாரணை ஆணைக்குழு முன்வைத்துள்ள பரிந்துரைகளை இரத்துச் செய்யுமாறு ரணில் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்நிலையில், குறித்த மனுவை எதிர்வரும் ஜனவரி மாதம் 28 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு நீதியரசர்கள் குழாம் உத்தரவிட்டுள்ளது.