January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

வடமேல் மாகாண ஆளுநராக வசந்த கரன்னாகொட நியமனம்

வடமேல் மாகாண ஆளுநராக முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட நியமிக்கப்பட்டுள்ளார்.

வடமேல் மாகாண ஆளுநராக பதவி வகித்த ராஜா கொல்லுரே கொவிட் தொற்றால் காலமானதை தொடர்ந்து அந்தப் பதவி வெற்றிடமானது.

இந்நிலையில் அந்தப் பதவிக்கு முன்னாள் கடற்படைத் தளபதியான வசந்த கரன்னாகொடவை நியமிக்க ஜனாதிபதிக்கு பரிந்துரைகள் செய்யப்பட்டிருந்தன.

இதன்படி இன்று முற்பகல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ முன்னிலையில் வசந்த கரன்னாகொட ஆளுநராக பதவியேற்றுள்ளார்.