
நோர்வேயின் இலங்கைக்கான தூதுவர் ரைன் எஸ்கெடால் மற்றும் துணைத் தூதுவர் ஹில்டே பேர்க் ஹான்சன் ஆகியோரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
புதன்கிழமை பிற்பகல் கொழும்பில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களாக செல்வம் அடைக்கலநாதன் மற்றும் கோவிந்தன் கருணாகரம் உள்ளிட்டோர் இந்த சந்திப்பில் கலந்துகொண்டுள்ளனர்.
தற்போதுள்ள அரசியல் சூழ்நிலைகள் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் பற்றி இதன்போது தூதுவருக்கு விளக்கமளிக்கப்பட்டுள்ளதாக அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்துள்ளனர். .
தமிழ் மக்களின் அரசியல் உரிமை சார்ந்து தொடர்ந்து உறுதியான ஆதரவு நிலைப்பாட்டில் நோர்வே இருப்பதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.