எரிவாயு சிலிண்டர் வெடிப்பு சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்டஈடு வழங்க மதிப்பீடு செய்யப்படுவதாக நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
எரிவாயு சிலிண்டர்களை தொடர்ந்தும் வெடிக்க வைக்க வேண்டும் என்ற நோக்கம் எனக்கு இல்லை.இந்த நெருக்கடி நிலைமைகளை தவிர்த்து,பிரச்சினைகளுக்கு தீர்வு காணவே நாம் விரும்புகின்றோம்.அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றோம்.இந்த விடயத்தில் சகல தரப்பின் ஆலோசனைகளையும், ஒத்துழைப்புகளையும் பெற்றுக்கொள்ள தயாராக உள்ளோம் எனவும் அவர் கூறினார்.
நுகர்வோர் அதிகார சபை, தர நிர்ணய குழுவின் ஆய்வுக்கு உற்படுத்தாத எந்த எரிவாயுவையும் நாட்டிற்குள் இறக்குமதி செய்ய முடியாது என்ற தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. அதேபோல், எரிவாயு கசிவு ஏற்பட்டால் நாற்றம் வீசும் இரசாயனம் கலக்கப்பட வேண்டும் என்ற தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.அத்துடன் புதிதாக இறக்குமதி செய்யப்படும் எரிவாயு சிலிண்டர்கள் புதிய அடையாளப்படுத்தப்பட்டுள்ளதுகலவையின் அளவு குறித்தும் கணித்தே சந்தைக்கு வழ