January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சூரியவெவ பகுதியில் காட்டு யானைத் தாக்குதலுக்கு உள்ளாகி இருவர் மரணம்

இலங்கையின் தென் மாகாணத்தில் உள்ள சூரியவெவ பகுதியில் காட்டு யானை தாக்கி, இருவர் உயிரிழந்துள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருக்கும் போதே, காட்டு யானைத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் சூரியவெவ- மீகஹஜதுர பிரதேசத்தைச் சேர்ந்த 36 மற்றும் 49 வயதுடைய ஆண்கள் இருவர் உயிரிழந்துள்ளனர்.

மக்கள் இரவு நேர பயணங்களில் கவனமாக இருக்கும்படியும், காட்டு யானைகள் நடமாடும் பகுதிகளுக்கான பயணங்களைக் குறைத்துக்கொள்ளுமாறும் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.