
வீடுகள் மற்றும் வர்த்தக நிலையங்களில் பயன்படுத்தப்படாதிருக்கும் புதிய எரிவாயு சிலிண்டர்களை மீளப் பெறுமாறு நுகர்வோர் விவகார அதிகார சபை லிட்ரோ நிறுவனத்திற்கு உத்தரவிட்டுள்ளது.
இதன்படி டிசம்பர் 4 ஆம் திகதிக்கு முன்னர் விநியோகஸ்தர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு விநியோகிக்கப்பட்ட பயன்படுத்தப்படாத அனைத்து உள்நாட்டு சமையல் எரிவாயு சிலிண்டர்களையும் திரும்பப் பெற வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு திரும்பப் பெறப்படும் பழைய பொலித்தீன் சீல் உள்ள பயன்படுத்தப்படாத எரிவாயு சிலிண்டர்களுக்கு பதிலாக புதிய பொலித்தீன் சீலுடன் கூடிய சிலிண்டர்களை விநியோகிக்குமாறு நுகர்வோர் விவகார அதிகார சபை லிட்ரோ நிறுவனத்திற்கு அறிவித்துள்ளது.
எரிவாயு சிலிண்டர் தொடர்பாக ஏற்பட்ட வெடிப்புச் சம்பவங்களை தொடர்ந்து, கடந்த 5 ஆம் திகதி முதல் புதிய அடையாளத்துடன் புதிய எரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்க லிட்ரோ நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.