January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஐ.ம.ச. பகிஷ்கரிப்பை கைவிட்டது: சபைக்குள் நடந்த சம்பவங்கள் தொடர்பில் ஆராயக் குழு நியமனம்

File Photo

பாராளுமன்றத்தில் கடந்த வௌ்ளி மற்றும் சனிக்கிழமைகளில் இடம்பெற்ற அமைதியின்மை சம்பவங்கள் தொடர்பில் ஆராய்ந்து, அறிக்கை சமர்ப்பிப்பதற்காக சபாநாயகரினால் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

பிரதி சபாநாயகர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தலைமையில் 10 பேர் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் இன்று அறிவித்தார்.

இதன்படி எம்.ஏ. சுமந்திரன், ரவூப் ஹக்கீம், வாசுதேவ நாணாயக்கார, சுசில் பிரேமஜயந்த, கயந்த கருணாதிலக்க, பந்துல குணவர்தன, அனுர பிரியதர்ஷன யாப்பா, விஜித்த ஹேரத், ரஞ்சித் மத்துமபண்டார, சமல் ராஜபக்‌ஷ ஆகியோர் குறித்த குழுவின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை சபைக்குள் தமது பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு வலியுறுத்தி கடந்த தினங்களாக சபை நடவடிக்கைகளை புறக்கணித்து வந்த ஐக்கிய மக்கள் சக்தி எம்.பிக்கள் இன்றைய தினம் சபை நடவடிக்கைகளில் கலந்துகொண்டனர்.