January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘பஸிலின் இந்திய விஜயத்திற்கான நோக்கம் என்ன?’; தெளிவுபடுத்த வேண்டுமென்கிறார் ரணில்

நிதி அமைச்சரின் இந்திய விஜயம் எதற்காக என்பதை அரசாங்கம் நாடாளுமன்றத்தில் தெளிவுபடுத்த வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் வலியுறுத்தினார்.

வெளிநாட்டு கையிருப்பு குறித்த தகவலை இந்தியாவிற்கு கூற முடியும் என்றால் ஏன் இந்த சபைக்கு கூற முடியாது? நாம் காரணம் கேட்டும் அதனை சபைக்கு முன்வைக்கவில்லை என்றால் அது சிறப்புரிமை மீறல் செயற்பாடாகும்.

நிதி அமைச்சின் விவாதத்திற்கு முன்னர் இதனை சபைப்படுத்த வேண்டும்.அதுமட்டுமல்ல, நிதி அமைச்சர் சபையில் இருக்க வேண்டும்.வரலாற்றில் முதல் தடவையாக நிதி அமைச்சர் இல்லாது வரவு- செலவு திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

வரவு- செலவு திட்டத்திற்கு நடுவில் நிதி அமைச்சர் ஏன் இந்தியாவிற்கு சென்றார் என்பதே எனது கேள்வி.வரவு- செலவு திட்டம் நல்லதென்றால், மத்திய வங்கி ஆளுனரின் வழிகாட்டல் இருக்கின்றது என்றால், சாலை வரைபடம் உள்ளதென்றால் அதில் நிதி அமைச்சர் இந்தியா செல்ல வேண்டும் என கூறவில்லையே.யாரிடமும் மண்டியிட்டு பணம் பெற்றுக்கொள்ள மாட்டோம் என கூறியுள்ளார். அப்படியென்றால் இந்தியாவிற்கு சென்று நிதி அமைச்சர் என்ன செய்தார்.புத்தகயாவை வழிபட சென்றாரா? அல்லது அரசாங்கத்திற்காக வேண்டிக்கொள்ள சென்றாரா? இதுவே எமது கேள்வியாகும் என்றார்.