November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘ரணிலுக்கு பிரதமர் பதவியை வழங்குவது தொடர்பாக கலந்துரையாடப்படவில்லை’: அரசாங்கம்

2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பிரதமர் பதவியில் மாற்றத்தை மேற்கொள்ளவோ அல்லது ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக நியமிப்பது குறித்தோ எவ்வித கலந்துரையாடலும் இடம்பெறவில்லை என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.

ஜனவரி மாதமளவில் இலங்கையின் பிரதமர் பதவியில் மாற்றங்கள் ஏற்படக்கூடிய சாத்தியப்பாடுகள் உள்ளனவா? என்று ஊடகவியலாளர் ஒருவர் அமைச்சரவை ஊடக சந்திப்பில் கேள்வி எழுப்பியுள்ளார்.

குறித்த கேள்விக்கு அமைச்சரவை இணைப் பேச்சாளர் ரமேஷ் பத்திரன பதிலளித்துள்ளார்.

பிரதமர் பதவியில் மாற்றங்கள் ஏற்படவுள்ளதாக வெளியாகும் செய்திகளில் எந்தவித உண்மைத் தன்மையும் இல்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.