May 24, 2025 7:05:50

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘வடக்கின் மூன்று தீவுகளை இந்திய நிறுவனத்துக்கு வழங்கத் தீர்மானிக்கவில்லை’: அரசாங்கம்

இலங்கையின் வட மாகாணத்தில் உள்ள மூன்று தீவுகளை இந்திய நிறுவனம் ஒன்றுக்கு வழங்குவதற்கு எவ்வித தீர்மானங்களும் மேற்கொள்ளப்படவில்லை என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாட்டை அமைச்சரவையின் இணைப் பேச்சாளர் ரமேஷ் பத்திரன வெளியிட்டுள்ளார்.

குறித்த தீவுகளில் முன்னெடுக்கப்படவுள்ள சூரிய சக்தி செயற்திட்டங்கள் தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்ட நிலையில், அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

சூரிய சக்தி செயற்திட்டத்தை இந்தியாவுக்கு வழங்குவதற்கு அமைச்சரவையில் எந்தத் தீர்மானமும் எடுக்கப்படவில்லை என்று அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.