இலங்கையின் வடமேல் மாகாண ஆளுநர் ராஜா கொல்லுரே காலமானார்.
கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த இவர், வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை காலமானதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
83 வயதான ராஜா கொல்லுரே, 2020 ஆகஸ்ட் 31 தொடக்கம் வடமேல் மாகாண ஆளுநராக பதவி வகித்தார்.
இதேவேளை இவர், கடந்த காலங்களில் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் தவிசாளராகவும் பதவி வகித்தார்.