
பாராளுமன்றம் சபாநாயகரின் கட்டுப்பாட்டை இழந்துள்ளதாக எதிர்க்கட்சியின் பிரதம கொறடா லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
அறிக்கை ஒன்றை வெளியிட்டே, அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் சபாநாயகர் பக்கச் சார்பாக செயற்படுவதைக் கண்டுகொள்ள முடியுமாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்க்கட்சி எம்.பியான மனுஷ நாணயக்காரவைத் தாக்க முற்பட்ட போதும், சபாநாயகர் அவர்களைக் கட்டுப்படுத்தவில்லை என்று அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
சபாநாயகரின் கண் முன்னே நடைபெற்ற சம்பவத்துக்கு நடவடிக்கை எடுக்காமல் குழுவொன்றை நியமிப்பது வேடிக்கையான விடயம் என்றும் கிரியெல்ல சுட்டிக்காட்டியுள்ளார்.
சபாநாயகரானதும் கட்சியின் பதவியைக் கைவிட வேண்டும் என்றும் இவர் பொதுஜன பெரமுனவின் வெலிகம பிரதேச அமைப்பாளராக செயற்படுவதாகவும் எதிர்க்கட்சி குற்றம்சாட்டியுள்ளது.