இலங்கையில் டொலர் தட்டுப்பாடு காரணமாக பால் மாவுக்கு மீண்டும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
முன்னர் இறக்குமதி செய்யப்பட்ட பால் மாவுக்கான கொடுப்பனவுகளை செலுத்தாத காரணத்தினால் சர்வதேச நிறுவனங்கள் புதிய பால் மா பங்குகளை அனுப்புவதை இடைநிறுத்தியுள்ளதாக பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இத்தோடு, உள்ளூர் பால் மா விநியோகம் தொடர்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினை காரணமாக உள்ளூர் பால் மாவிற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே கடைகள் மற்றும் பல்பொருள் அங்காடிகளில் பால் மா கொள்வனவு செய்வதில் பெரும் சிக்கல்களை எதிர்கொண்டுள்ளதாக நுகர்வோர் விசனம் வெளியிட்டுள்ளனர்.
ஒரு பாக்கெட் பால் மாவை கொள்வனவு செய்ய சில கடைகளில் 10 யோகட்டுக்களை வங்கவேண்டியுள்ளதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.