January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட எதிரணியினரை சந்தித்த பிரதமர்

பாராளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஐக்கிய மக்கள் சக்தி எம்.பிக்களுடன் பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷ கலந்துரையாடியுள்ளார்.

சபைக்குள் தமது பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டுமென வலியுறுத்தி இன்று காலை பாராளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் எதிர்க்கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இவ்வேளையில் அந்த இடத்திற்கு சென்ற பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷ அங்கிருந்தவர்களுடன் சுமுகமாக கலந்துரையாடியுள்ளதுடன், எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை நடத்தும் போது இதற்கும் மேல் எம்.பிக்களை கலந்துகொள்ளச்செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.

இதன்போது, ராஜித சேனாரத்ன, பாட்டலி சம்பிக்க ரணவக்க உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவ்விடத்தில் இருந்ததுடன், அவர்களுடன் கடந்த காலங்களில் தான் முன்னெடுத்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் தொடர்பில் பிரதமர் நினைவுகூர்ந்துள்ளார்.