இலங்கையில் கடந்த சில நாட்களாக எரிவாயு வெடிப்பு சம்பவங்கள் பதிவானதையடுத்து இடைநிறுத்தப்பட்ட எரிவாயு சிலிண்டர்களை மீண்டும் விற்பனை செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது.
எனினும் ஆய்வுகளின் பின்னர் சந்தைக்கு வெளியிடப்படும் சிலிண்டர்களை அடையாளம் காணும் வகையில் புதிய மாற்றம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி எரிவாயு சிலிண்டர்களின் வாய் பகுதியை சீல் செய்ய பயன்படுத்தப்படும் பொலித்தீன் உறையின் நிறம் மாற்றப்பட்டுள்ளதாக நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது.
லிட்ரோ எரிவாயு சிலிண்டரில் உள்ள பொலித்தீன் உறை சிவப்பு நிற இலட்சினையுடன் வெள்ளை பின்னணியைக் கொண்டுள்ளது.
அதே சமயம் லாஃப்ஸ் எரிவாயு சிலிண்டர்களில் பொலித்தின் உரை நீல நிற இலட்சினையுடன் மஞ்சள் பின்னணியை கொண்டதாகவும் மாற்றப்பட்டுள்ளது.
எனினும் இரு நிறுவனங்களும் சிலிண்டர்களின் நிறத்தை மாற்றவில்லை.