May 5, 2025 10:19:25

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இரண்டு வருட குழந்தை உட்பட 7 பேர் நீரில் மூழ்கி மரணம்

நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பதிவான நீருடன் தொடர்புடைய விபத்துக்களில் இரண்டு வருட குழந்தை உட்பட 7 பேர் மரணமடைந்துள்ளனர்.

பேராதெனிய, முல்லைத்தீவு மற்றும் குருவிட்ட ஆகிய பிரதேசங்களில் இந்த விபத்துகள் பதிவாகியுள்ளன.

பேராதெனிய மகவெலி ஆற்றில் நீராடிய ஒரே குடும்பத்தின் ஐவர் நீரில் மூழ்கியுள்ளனர்.

சம்பவத்தில் இருவர் மீட்கப்பட்டுள்ளதுடன் 2 வருட குழந்தை உட்பட மூவர் மரணமடைந்துள்ளனர்.

முல்லைத்தீவு கடலில் மூழ்கி மூவர் உயிரிழந்துள்ளனர்.

ஒருவரின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளதுடன் இருவர் காணாமல் போயுள்ளனர்.

குருவிட்ட பகுதியில் உள்ள கெரண்டி எல்லவில் நீராடிய ஒருவரும் மூழ்கி, உயிரிழந்துள்ளார்.

பண்டிகை காலத்தில் அதிகமான விபத்துகள் ஏற்படுவதாகவும் மக்கள் கவனமாக இருக்குமாறும் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.