
மத்திய வங்கி பிணைமுறி மோசடி வழக்கின் 11 குற்றச்சாட்டுக்களில் இருந்து முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
2016 நல்லாட்சி அரசாங்கத்தில் ரவி கருணாநாயக்க நிதி அமைச்சராக செயற்படும் போது, மத்திய வங்கி பிணைமுறிகளில் மோசடி இடம்பெற்றது.
அதனைத் தொடர்ந்து அவர் அமைச்சர் பதவியையும் இராஜினாமா செய்தார்.
பிணைமுறி மோசடி வழக்கில் ரவி கருணாநாயக்க மீது 22 குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
அதில் 11 குற்றச்சாட்டுக்களில் இருந்து அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
இதுதொடர்பான வழக்குகள் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இடம்பெற்று வருகின்றன.