File Photo
பாராளுமன்றத்தில் சபாநாயகரால் தமது பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் வரையில் வரவு செலவுத் திட்ட விவாதத்தை புறக்கணிப்பதற்கு பிரதான எதிர்க்கட்சியான சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.
பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வரவு செலவுத் திட்டத்தின் பாதுகாப்பு அமைச்சுக்கான ஒதுக்கீடுகள் தொடர்பான விவாதத்தின் போது எதிர்க்கட்சி உறுப்பினர் மனுஷ நாணயக்காரவுக்கு உரையாற்றுவதற்காக மேலதிக நேரத்தை வழங்காமை தொடர்பில் சபையில் சர்ச்சை ஏற்பட்டிருந்தது.
இதன்போது சபைக்குள் அமைதியின்மை ஏற்பட்ட நிலையில், மறுநாள் சனிக்கிழமை அது தொடர்பில் சர்ச்சை ஏற்பட்டது.
இதன்போது தமக்கு பாராளுமன்றத்தில் பாதுகாப்பு இல்லை எனக் கூறி ஐக்கிய மக்கள் சக்தி எம்.பிக்கள் வெளிநடப்பு செய்ததுடன், பாராளுமன்ற நுழைவாயிலில் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.
இந்நிலையில் சபாநாயகரால் எமது பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் வரையில் சபை அமர்புகளை புறக்கணிப்போம் என்று அந்தக் கட்சியின் எம்.பியான முஜிபூர் ரஹ்மான் இன்று தெரிவித்துள்ளார்.