காலகொட அத்தே ஞானசார தேரர் தலைமையில் ஜனாதிபதியினால் அமைக்கப்பட்டுள்ள ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ செயலணி மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடிக்கு சென்று மக்கள் கருத்தறியும் பணியில் ஈடுபட்டுள்ளது.
நேற்று அந்தப் பகுதிக்கு சென்ற ஞானசார தேரர் தலைமையிலான செயலணி உறுப்பினர்கள் அங்கு பல்வேறு தரப்பினரை சந்தித்து கருத்துக்களை பெற்றுக்கொண்டுள்ளனர்.
இதன்போது இந்தக் குழுவினருக்கு அங்குள்ள மக்கள் விசேட வரவேற்பளித்துள்ளனர்.
இதேவேளை கிழக்கு மாகாணத்தின் பல்வேறு பிரதேசங்களுக்கும் சென்று இந்த செயலணி உறுப்பினர்கள் மக்கள் கருத்தறியும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.