January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

அனுரகுமார தலைமையில் கட்சிகள் பல இணைந்த புதிய தேசிய சக்தி!

நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமைக்கு மத்தியில் ஜே.வி.பி தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தலைமையில் கட்சிகள் பல ஒன்றிணைந்து புதிய தேசிய சக்தியொன்றை கட்டியெழுப்ப நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அந்தக் கட்சியின் பிரசார செயலாளரான பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

ஹட்டன் நகரில் இன்று நடைபெற்ற ஜே.வி.பியின் ‘கிராமத்தில் இருந்து ஆரம்பிப்போம்’ என்ற வேலைத்திட்டம் தொடர்பான நிகழ்விலேயே விஜித ஹேரத் இதனை தெரிவித்துள்ளார்.

ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பலரின் வேண்டுகோளுக்கு இணங்க புதிய அணி யொன்றை கட்டியெழுப்பி, நாட்டின் ஆட்சி அதிகாரத்தை அதன் கீழ் கொண்டு வருவதற்கு எதிர்பார்த்துள்ளதாக அவர் அதன்போது குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய ஆட்சியாளர்களுக்கு நாட்டை கொண்டு செல்ல முடியாத நிலைமையே காணப்படுவதாகவும், இதனால் அதிகாரத்தை கைப்பற்ற புதிய சக்தியை கட்டியெழுப்புவதாகவும் விஜித ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.