May 1, 2025 10:10:21

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை மீளத் திறக்க முடிவு!

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலைய செயற்பாடுகளை மீள ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

டிசம்பர் 7 ஆம் திகதி முதல் இதன் செயற்பாடுகள் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை நவம்பர் 15 ஆம் திகதி முதல் 50 நாட்களுக்கு தற்காலிகமான மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.

அந்நிய செலாவணி நெருக்கடி நிலைமையை சீர்செய்யும் வகையில் அதனை தற்காலிகமாக மூடுவதற்கும், அதுவரையில் சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளை இறக்குமதி செய்வதற்கும் தீர்மானிக்கப்பட்டிருந்தது.

எனினும் இது தொடர்பில் பெட்ரோலிய தொழிற்சங்கங்கள் மற்றும் எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு வெளியிட்டு வந்த நிலையில், அதனை மீளத் திறப்பதற்கு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.