February 23, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

வவுனியாவில் ஆறுமுக நாவலரின் நினைவுநாள் நிகழ்வு

சைவத்துக்கும் தமிழுக்கும் பெருந்தொண்டாற்றிய ஆறுமுக நாவலரின் நினைவுநாள் நிகழ்வு, வவுனியா இலுப்பையடியில் அமைந்துள்ள அவரது சிலையடியில் இன்று இடம்பெற்றது.

வவுனியாநகரசபை மற்றும் உள்ளூர் விளைபொருள் உற்பத்தியாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் உபநகர பிதா சு.குமாரசாமி தலைமையில் குறித்த நிகழ்வுகள் இடம்பெற்றது.

இதன்போது நாவலரின் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.

அடிகளார் தொடர்பான சிறப்புரையினை தமிழருவி சிவகுமாரன், தமிழ்மணி அகளங்கன் ஆகியோர் நிகழ்த்தினர்.

இந்நிகழ்வில்இநகரசபை உறுப்பினர்களான  க.சந்திரகுலசிங்கம், நா.சேனாதிராஜா, சுமந்திரன்,  சு.காண்டீபன், உள்ளூர் விளைபொருள் உற்பத்தியாளர் சங்கத்தின் கு.நந்தகுமார் உட்பட பலர் கலந்தகொண்டனர்.

This slideshow requires JavaScript.