
File Photo
கொழும்பு வாழைத்தோட்டம் பகுதியில் இனந்தெரியாத குழுவினரால் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று இரவு, காரொன்றில் வந்த கும்பல் இந்தக் கொலையை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சம்பவத்தில் 32 வயதுடைய ‘கெசல்வத்த பவாஸ்’ என்ற நபர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
உயிரிழந்த நபர் போதைப்பொருள் குற்றச்செயல் தொடர்பில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த நிலையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது.
இதனுடன் தொடர்புடைய சந்தேக நபர்களை தேடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.