January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘வடக்கு, கிழக்கின் நீண்டகால பிரச்சினைகளை தீர்க்க நாம் தயார்’

மூன்று தசாப்த யுத்தம் நிகழ்ந்த காரணத்தினால் வடக்கு, கிழக்கு பிரதேசங்களின் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தடைப்பட்டது என்பதை சகலரும் ஏற்றுக்கொள்ள வேண்டும். ஆனால் எமது அரசாங்கத்தில் வடக்கு, கிழக்கிற்கு எந்த குறையும் வைக்கவில்லை என்பதை நாடாளுமன்றத்தில் இராஜாங்க அமைச்சர் நிமல் லான்ஸா தெரிவித்தார்.

அதிகார பரவலாக்கல் குறித்து எம்மத்தியில் எந்த முரண்பாடுகளும் இல்லை.வடக்கு, கிழக்கின் நீண்டகால பிரச்சினைகளை தீர்க்க, நாம் வாக்குறுதி வழங்கியதற்கு அமைய நடவடிக்கை எடுக்க அதற்கு சுமந்திரன் போன்றவர்களின் கருத்துக்களை ஏற்றுக்கொள்வதில் எந்த பிரச்சினைகளும் இல்லை எனவும் அவர் கூறினார்.

எமது அமைச்சின் கீழ் வடக்கு, கிழக்கில் எந்த குறைபாடுகளும் வைக்கவில்லை.அதிகளவில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.எனினும் இதற்கு முன்னைய ஆட்சியில் முழுமையாக வடக்கு, கிழக்கு கைவிடப்பட்டது.எனவே தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவுடன் ஆட்சி அமைத்த நல்லாட்சியிடமே இவற்றை கேட்க வேண்டும் எனவும் அவர் கூறினார்.