January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கடலுக்கு செல்பவர்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

Sea Waves Common Image

மேற்கு – மத்திய வங்காள விரிகுடாவில் மையம் கொண்டுள்ள ‘ஜவாட்’ புயல் காரணமாக வடக்கு மற்றும் வடமேற்கு பகுதிகளின் கடற்பரப்புகளுக்கு செல்ல வேண்டாம் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

‘ஜவாட்’ புயல் படிப்படியாக வலுவிழந்து வடக்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து டிசம்பர் 5 ஆம் திகதி ஒடிசா கடற்கரையை அடைய வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

குறித்த கடற்பரப்புகளில் மணிக்கு 60-70 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்றும், மணிக்கு 80 கிலோமீற்றர் வரையான வேகத்தில் காற்று வீசுவதுடன், கடல் கொந்தளிப்பாக காணப்படும் எனவும் அறிவித்தலில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, அடுத்த 24 மணி நேரத்திற்கு மேற்கு-மத்திய வங்கக் கடலின் ஆழ்கடல் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என கடற்படை மற்றும் மீனவர்களை வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

அத்தோடு குறித்த கடல் பகுதிகளில் இருப்பவர்கள் உடனடியாக கரையோரங்களுக்குத் திரும்பும் படியும் அல்லது பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.