July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

3 நிபந்தனைகளின் கீழ் எரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்க அனுமதி!

இலங்கையில் மூன்று நிபந்தனைகளின் கீழ் எரிவாயுவை சந்தையில் விற்பனை செய்ய நுகர்வோர் அதிகார சபை  அனுமதி அளித்துள்ளது.

நாட்டில் இடம் பெற்ற எரிவாயு சிலிண்டர் வெடிப்பு சம்பவங்களை தொடர்ந்து எரிவாயு விநியோகம் ஆய்வுகளுக்காக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது.

இறக்குமதி செய்யப்பட்ட எரிவாயு இருப்புக்கள் ஆய்வு செய்யப்பட்டதையடுத்து மீண்டும் எரிவாயு விநியோகம் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் அதிகார சபையின் தலைவர் சாந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

எனினும் முன்று நிபந்தனைகளின்படி, இதற்கு முன்னர் இறக்குமதி செய்யப்பட்ட LP எரிவாயு இருப்புகள் சந்தைக்கு வெளியிட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

புதிதாக இறக்குமதி செய்யப்பட்ட எரிவாயுவை சந்தைக்கு வெளியிடும் முன் தர நிலைகளுக்கு இணங்க Mercaptan சேர்த்தல் வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எரிவாயு சிலிண்டர்களை உருவாக்கும் செயல்பாட்டின் போது 100 சமையல் எரிவாயு சிலிண்டர்களில் ஒவ்வொன்றையும் சோதித்து, வரிசை எண்களைச் சேர்ப்பதோடு, அந்த தகவல் நுகர்வோர் அதிகார சபைக்கு வழங்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, திரவ பெட்ரோலிய வாயு நாட்டிற்கு கொண்டு வந்துள்ள கப்பல்கள் கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ளதாகவும், அனைத்து கப்பல்களில் இருந்து எடுக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்ட மாதிரிகள் தர நிர்ணயங்களுக்கு இணங்குவதாகவும் நுகர்வோர் அதிகார சபை கூறியுள்ளது.