File Photo
சபையில் பாதுகாப்பை உறுதிப்படுத்தக் கோரி சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சபைக்குள் தமக்கு பேசுவதற்கு போதியளவு நேரம் ஒதுக்கப்படுவதில் அநீதி இழைக்கப்படுவதாகம், ஆளும் கட்சி உறுப்பினர்கள் சிலர் சபைக்கு வெளியில் உள்ள மண்டபத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மீது தாக்குதல் நடத்த முயற்சித்ததாகவும் எதிர்க்கட்சியினர் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இன்று காலை வரவு செலவுத் திட்ட விவாதத்துக்காக பாராளுமன்றம் கூடிய போது, குறித்த விடயம் தொடர்பில் எதிர்க்கட்சியினர் தமது எதிர்ப்பினை சபாநாயகரிடம் தெரிவித்திருந்ததுடன், அதன்பிறகு பாராளுமன்றத்தில் இருந்து வெளிநடப்புச் செய்து, பாராளுமன்ற சந்தியில் வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தமது உறுப்பினர்கள் ஆளும்கட்சி உறுப்பினர்களால் தாக்குதல் அச்சத்தை எதிர்நோக்கியுள்ளதாகவும் அதனால் எதிர்க்கட்சி எம்.பிக்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் வரை வரவு செலவுத் திட்ட விவாதங்களில் கலந்துகொள்ளாது சபை அமர்வுகளை புறக்கணிக்கப்பதாகவும் எதிர்க்கட்சியின் பிரதம கொரடா லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.