இலங்கையின் பல்வேறு பகுதிகளுக்கும் இரவு நேரங்களில் மின் துண்டிப்புகளை மேற்கொள்ள மின் சக்தி அமைச்சு தீர்மானித்துள்ளது.
இரவு நேர மின் துண்டிப்பு சில நாட்கள் வரை அமுலில் இருக்கும் என்று அமைச்சு தெரிவித்துள்ளது.
இரவு 6 மணி முதல் 9 மணி வரையான நேரத்தில் ஒரு மணிநேர மின் துண்டிப்பு சாத்தியமாகும் என்றும் அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
அடுத்த 3 அல்லது 4 நாட்களுக்கு நாட்டின் சில பகுதிகளில் 1 மணி நேர மின் துண்டிப்பு நடைபெறும் என்று மின்சாரசபையும் தெரிவித்துள்ளது.