
யாழ்ப்பாணம் – மிருசுவில் பகுதியில் ரயிலுடன் டிமோ பட்டா வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் சாரதி உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த ரயிலுடன் குறித்த வாகனம் மோதியதில் விபத்து சம்பவித்துள்ளது.
இந்த சம்பவத்தில் கொடிகாமம் – தவசிகுளத்தை சேர்ந்த 32 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கொடிகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.