May 1, 2025 10:10:21

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சட்டப்படி வேலைசெய்யும் போராட்டத்தை கைவிட மின்சார பொறியியலாளர்கள் முடிவு!

Electricity Power Common Image

நாடு முழுவதும் மின்தடை ஏற்பட்டுள்ள நிலையில், தமது தொழிற்சங்க நடவடிக்கையை தற்காலிகமாக நிறுத்தத் தீர்மானித்துள்ளதாக இலங்கை மின்சார பொறியியலாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் இன்று முற்பகல் 11.40 மணி முதல் மின்சாரம் தடைப்பட்டுள்ளது.
பிரதான மின்விநியோகக் கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்பக் கோளாறு காரணமாகவே தடை ஏற்பட்டுள்ளதாக மின்சார சபை தெரிவித்துள்ளது.

மூன்று மணித்தியாலங்களின் பின்னர் கொழும்பில் சில பிரதேசங்களில் மின்சாரம் வழமைக்கு திரும்பியுள்ள போதும், மற்றைய பிரதேசங்களில் வழமைக்கு திரும்பவில்லை.

இந்நிலையில் கடந்த சிலநாட்களாக சட்டப்படி வேலை செய்யும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மின்சார பொறியியலாளர்கள் தற்போதைய நிலைமையை கருத்தில் கொண்டு, தமது போராட்டத்தை தற்காலிகமாக கைவிடத் தீர்மானித்துள்ளனர்.