June 30, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பாடசாலை விடுமுறை தொடர்பான அறிவித்தல்!

இலங்கையில் அனைத்து பாடசாலைகளுக்கும் டிசம்பர் மாதம் 24 ஆம் திகதி முதல் 2022 ஜனவரி 2 ஆம் திகதி வரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

ஆரம்பத்தில் டிசம்பர் 24 முதல் 27 ஆம் திகதி வரையில் விடுமுறை வழங்கத் தீர்மானிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் அந்த விடுமுறை தினங்களில் மாற்றத்தை மேற்கொண்டுள்ள கல்வி அமைச்சு விடுமுறையை ஜனவரி 2 ஆம் திகதி வரையில் நீடித்துள்ளதாக அறிவித்துள்ளது.

இதன்படி ஜனவரி 3 ஆம் திகதி முதல் மீண்டும் பாடசாலைகள் ஆரம்பமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை அடுத்த வருடத்திற்கான முதலாம் தவணை கல்வி நடவடிக்கைகளை ஏப்ரல் மாதம் முதல் ஆரம்பிப்பதற்கும் கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.